நவ.5 ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்!!
Nov 1, 2023, 09:22 IST1698810739657

தமிழகத்தில் வரும் 5ம் தேதி, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவித்துள்ளார். அனைத்து நாட்களிலும், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்களுக்கு உணவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.