"ரேஷன் ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் சண்டையிட கூடாது" - கூட்டுறவுத்துறை உத்தரவு
Nov 16, 2023, 18:59 IST1700141356258

தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியாயவிலைக் கடைப் பணியாளர்கள், குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மண்டலங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் உள்ளேயும் வெளியேயும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். தரமற்ற அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும். நியாய விலைக் கடைப் பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவுடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.