ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..! தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் ...!
Oct 16, 2026, 06:35 IST1792112735000
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி (திங்கள் கிழமை) ஆயுத பூஜை மற்றும் 20-ந்தேதி (செவ்வாய் கிழமை) சரஸ்வதி பூஜை பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடை ஊழியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதற்கு முந்தையை விடுமுறை தினமான 18-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க வசதியாக அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது.
இந்த ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வதை ஈடுகட்டும் விதமாக அடுத்த மாதம் 21-ந்தேதி விடுமுறை நாளாக உணவுத்துறை அறிவித்துள்ளது.

