ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..! ஜூன் 26-க்குள் இதை முடிக்கணும்..!

 
ration

ரேஷன் அட்டைதாரர்கள்  வரும் 26 ஆம் தேதிக்குள் (26.6.26), அருகிலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு சென்று இந்த பணியை செய்துமுடிக்க வெண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்துகொள்ளாதவர்கள், வரும் 26 ஆம் தேதிக்குள் (26.6.26), அருகிலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு சென்று இந்த பணியை செய்துமுடிக்க வெண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

ரெஷன் அட்டை தொடர்பான சிக்கல்களை தவிர்க்கவும், பொது விநியோக முறையின் கீழ் மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளையும் தொடர்ந்து பெறவும், அவ்வப்போது மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் புதுப்பித்தல்களை கவனித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக அவசியமாகும். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட மக்கள், மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த பணிகளை, ஜூன் 26ஆம் தேதிக்குள் செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ரேஷன் கார்டு கைரேகை பதிவை செய்து முடிப்பது எப்படி?

இதற்கான முழுமையான செயல்முறையை இங்கே காணலாம்:

  • இதற்கு முதலில் ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்.
  • அங்குள்ள ஊழியரிடம் கைரேகை பதிவு செய்ய வந்திருப்பதை தெரிவிக்கவும்.
  • அவர் உங்களது ரேஷன் அட்டை பதிவுகளை முதலில் e-POS கருவியில் பதிவு செய்வார்.
  • அதன் பிறகு உங்கள் ஆதார் எண்ணை சரிபார்ப்பார்.
  • இதன் பிறகு, கைரேகை ஸ்கேனர் கருவியின் மூலம் உங்கள் விரலை ஸ்கேன் செய்து பதிவு செய்வார்.
  • கருவியில் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட கைரேகை, ஆதார் தரவுத்தளத்தில் உள்ள கைரேகையுடன் பொருந்த வேண்டும்.
  • அதன் பிறகு ரேஷன் அட்டை கைரேகை இணைக்கப்படும்.

ரேஷன் அட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே கைரேகை பதிவு செய்ய முடியும். ஆகையால். உங்கள் ரேஷன் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது மிக கட்டாயமாகும். இன்னும் இவ்விரண்டும் இணைக்கப்படவில்லை என்றால், தேவையான ஆவணங்களுடன் ரேஷன் கடை ஊழியர்களை அணுகி முதலில் அந்த பணிகளை செய்துமுடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.