ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..! ஜூன் 25-க்குள் இதை கட்டாயம் செஞ்சிடுங்க..!!
தமிழகத்தில் சில மாவட்டங்களில் ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளது. வேலை காரணமாக வெளியூர்களில் தற்காலிகமாக வசிப்பவர்களும் வரும் 25ம் தேதிக்குள் கைவிரல் ரேகையை பதிவு செய்வது அவசியம்.
மேலும் இறந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை, வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரேஷன் கார்டில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கவே இந்த கைவிரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ரேஷன் அட்டைகளில் பெயர்மாறியுள்ளதால் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது. இதை தடுக்க ஆதார் எண் இணைக்கவும், விரல் ரேகையை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இறந்த நபர்களின் ஆதார் எண் விவரங்களை பெற்று அதனை அறிக்கையாக அனுப்பி வைக்க அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கவே இந்த பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில் “ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயமாக கைரேகை பதிவு செய்ய வேண்டும். ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்து விட்டு, கைரேகை பதிவு செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இறந்திருந்தால் அவர்கள் குறித்த அறிக்கையை உடனடியாக கூட்டுறவுத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே, பொருள்களின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது இறந்தவர்களின் அறிக்கையை கூட்டுறவுத் துறை கேட்டுள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் ரேஷன் கார்டில் ஆதார் கார்டை இணைத்து விட்டனர். இருப்பினும் ஒரு சிலர் இன்னும் இணைக்காத காரணத்தால் தான், தற்போது கூட்டுறவுத் துறை இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்வது எப்படி?
* ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை எடுத்துக் கொண்டு, அருகில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்.
* ரேஷன் கடை ஊழியரிடம் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என கூறினால், அவர் உங்களுடைய ரேஷன் கார்டு அட்டையை e-PoS இயந்திரத்தில் வைத்து, ஆதார் எண்ணை உள்ளிடுவார்.
* பிறகு நீங்கள் கைரேகையை வைக்க வேண்டும்.
* ஆதாரில் உள்ள கைரேகையுடன் இது பொருந்தினால், ரேஷன் கார்டில் கைரேகை பதிவு செய்யப்படும்.
உங்களுடைய ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைத்த பிறகு கைரேகையை பதிவு செய்ய முடியும். ஒருவேளை இன்னமும் நீங்கள் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால், ரேஷன் கடை ஊழியரிடம் அதுகுறித்த தகவல்களைக் கூறி இணைத்தல் வேண்டும்.

