கள்ளக்குறிச்சியில் மீண்டும் பதற்றம்! 7 பேருக்கு எலி காய்ச்சல்

 
எலி காய்ச்சல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூர் கிராமத்தில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் மூப்பனார் கோவில் தெருவில் வசித்து வந்த பொது மக்களுக்கு சிலர் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு லேசான காய்ச்சலால் அருகில் உள்ள தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களை பரிசோதனை செய்த போது குடிநீரில் கால்நடை தொற்று ஏற்பட்டுள்ளதால் இவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த காய்ச்சல் அதிகரித்ததால் ரத்த சோதனை மாதிரி சோதனை செய்தபோது எலி காய்ச்சல் எனவும் இந்த காய்ச்சல் குடிநீரால்தான் ஏற்பட்டது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  இருந்து மருத்துவர்கள் குழு வடதொரசலூர் கிராமத்தில் மருத்துவ முகாமிட்டு பொது மக்களுக்கு தீவிர சோதனை செய்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.