ராசிபுரம் இரண்டரை வயது குழந்தை பரிதாப பலி- 8 நாட்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட சோகம்

 
ராசிபுரம் இரண்டரை வயது சிறுவன் பரிதாப பலி- பரபரப்பு பின்னணி

ராசிபுரம் அருகே தாத்தாவுடன் குட்டைக்கு மீன் பிடிக்க சென்ற இரண்டரை வயது சிறுவன் மாயமான விவகாரத்தில் 8 நாட்களுக்கு பிறகு குட்டை அருகேயுள்ள உறிஞ்சி குழயில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். செங்கல் சூளை கூலித்தொழிலாளியான இவர் கடந்த 16-ம் தேதி, மனைவி மகள் வழி பேரனான இரண்டரை வயது சிறுவன் மணிகண்டனுடன், ராசிபுரம் அடுத்த நம்பர்.3 கொமாரபாளையம் பகுதியில் உள்ள குட்டைக்கு மீன் பிடிக்க சென்றார். பின்னர் பரசுராமன் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, சிறுவன் மணிகண்டன் திடீரென மாயமானதாக கூறப்பட்டது. தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தியதோடு, தீயணைப்புத்துறையினரை வரவழைத்து 2 நாட்களாக குட்டையில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சிறுவன் கிடைக்காததால்,  வெண்ணந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று சிறுவன் மாயமான அதே குட்டைக்கு அருகே உள்ள உறிஞ்சிக் குழியில் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாயமான 8 நாட்களுக்கு பிறகு 2½ வயது சிறுவன் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.