”தூத்துக்குடி மாநகரின் தந்தை” ராவ்பகதூர் குரூஸ் பெர்னாண்டஸ் பிறந்த நாள் இன்று!

 
ttv

ராவ்பகதூர் குரூஸ் பெர்னாண்டஸ் அவர்கள் ஆற்றிய தொண்டுகள் மக்கள் மனதில் என்றென்றும் வானளவு உயர்ந்து நிற்கும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  தூத்துக்குடி மக்களின் நலனை காக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ”தூத்துக்குடி மாநகரின் தந்தை”  என அனைவராலும் போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பெர்னாண்டஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று...

tn

ஐந்து முறை நகர் மன்றத் தலைவராக பதவி வகித்த காலத்தில் ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் அடிப்படைக் கல்வி, கூட்டுறவு வங்கியில் கடனுதவி, தீண்டாமை எதிர்ப்பு, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என  ராவ்பகதூர் குரூஸ் பெர்னாண்டஸ் அவர்கள் ஆற்றிய தொண்டுகள் மக்கள் மனதில் என்றென்றும் வானளவு உயர்ந்து நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

tn

இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  சார்பில், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு .T.விர்ஜின் ஆரோக்கியபிரைட்டர், கழக வர்த்தக அணி இணைச்செயலாளர் திரு.P.பாக்கிய செல்வன் மற்றும் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட/வார்டு கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஊராட்சி/கிளை  நிர்வாகிகள்,
 தொண்டர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.