தொடையில் தங்கக் கட்டிகளை கடத்தி வந்த நடிகை ரன்யா ராவ்-க்கு 3 நாள் போலீஸ் காவல்

 
ரன்யா ராவ்

தொடையில் வைத்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்த நடிகை ரன்யா ராவ்-க்கு 3 நாள் போலீஸ் காவல் துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு (DRI) நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் வீட்டில் அதிகாரிகள் சோதனை: ரூ.4.73  கோடி மதிப்பு ரொக்கம், தங்கம் சிக்கியது | Officials raid actress Ranya Rao  house in ...

துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படும் வழக்கில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்கரகாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி பெங்களூரு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்தனர். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இன்று மாலை 5 மணி முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு நடிகையை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு ஜாமீன் மனு குறித்தான முடிவு எடுத்துக் கொள்ளலாம் முதலில் அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்துங்கள் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிபதியின் உத்தரவை அடுத்து இன்று இரவுக்குள் வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகள் நடிகையை சிறைச்சாலையில் இருந்து காவலில் எடுத்து தங்களது விசாரணையை துவங்க உள்ளனர். விசாரணையின் போது நடிகையின் வழக்கறிஞர் அவரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்டார் எத்தனை கிலோ தங்கங்கள் கடத்தப்பட்டுள்ளன இதற்கு பின்னால் உள்ள பெரும் சக்திகள் யார் யார் என்று பல்வேறு கோணங்களில் நடிகையிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.