அரசு கலை அறிவியல் பட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

 
college reopen

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

college

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மே 8ம் தேதி தொடங்கியது. மே 8ம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையானது கடந்த 22 ஆம் தேதியுடன் முடிவு பெற்றது.  சுமார்  164 அரசு கலைக்கல்லூர்களில் ஒரு லட்சத்து 7,395 இடங்களுக்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

professor college tamilnadu

இந்நிலையில் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  கல்லூரிகளிலும், ஆன்லைன் மூலமாகவும் மாணவர்கள் தரவரிசையை தெரிந்து கொள்ளலாம் . தரவரிசை பட்டியல் தமிழ்நாட்டில் உள்ள அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 30ம் தேதி முதல் ஜூன்  மாதம் 9ம் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வும் ,  அடுத்த மாதம் 12 முதல் 20ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது.  கலந்தாய்வு முடிவடைந்த பின்னர் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும். முன்னதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.