“பெரியாரையும், தமிழ் தேசியத்தையும் எதிர் எதிராக நிறுத்துவது பேராபத்து”- நாதக விலகிய நிர்வாகி பேட்டி

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார்,அம்பேத்கர், பிரபாகரன் குறித்து முன்னுக்கு பின் முரண்பாடாக சீமான் பேசி வருகிறார். இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து நீங்கி வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் வசித்து வரும் பாவேந்தன் என்பவர் கிழக்கு மாவட்ட செயலாளராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டிட்டார்.
இதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சிக்காக அடிப்படை தொண்டனாக இருந்து மாவட்ட செயலாளராக உயர்ந்த இவர், கட்சி ஒருங்கிணைப்பாளர் சமீப காலமாக ஒருமித்த கருத்துடன் செயல்படுவதால் மனம் வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய பாவேந்தன், “புதிதாக எந்த கட்சியிலும் இணைவது குறித்து தற்போது ஆலோசக்கவில்லை, சீமான் தனது கொள்கையை மாற்றும் வரை தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விலகுவார்கள். பெரியாரையும், தமிழ் தேசியத்தையும் எதிர் எதிராக நிறுத்துவது பேராபத்து” என்றார். இவர் கட்சியிலிருந்து விலகியதை தொடர்ந்து இவரது ஆதரவாளர்களும் விரைவில் வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.