ரமலான் நோன்பு தொடக்கம் - தினகரன் வாழ்த்து!!

 
ttv ttv

புனித ரமலான் மாதத்தில் நோன்பை தொடங்கியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ramzan

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , இறை உணர்வோடு உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி ஏழை, எளியோரின் ஏழ்மையை போக்கிடும் வகையில் புனித ரமலான் மாதத்தில் நோன்பை தொடங்கியிருக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



மனிதகுலத்தின் வழிகாட்டி இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த அன்பு, கருணை, ஈகை, மனிதநேயம் போன்ற நற்பண்புகளை பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்களின் எண்ணங்கள் அனைத்தும் இப்புனித ரமலான் மாதத்தில் நிறைவேறட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.