ராமோஜி ராவ் மறைவு - முதலமைச்சர் இரங்கல்

ராமோஜி ராவ் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈடிவி நெட்வொர்க் மற்றும் ராமோஜி ஃபிலிம் சிட்டியின் தலைவரான ராமோஜி ராவ், ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 87.உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அவர் ஜூன் 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சூழலில் இன்று அவர் உயிர் பிரிந்தது.
Deeply saddened by the passing away of Padma Vibhushan Thiru. Ramoji Rao garu, the visionary founder of the Ramoji Group. His remarkable contributions to media, journalism, and the film industry have left an everlasting legacy. My heartfelt condolences go out to his family,… pic.twitter.com/oedBtibWFx
— M.K.Stalin (@mkstalin) June 8, 2024

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ்-இன் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது; ஊடகம், பத்திரிகை மற்றும் திரைப்படத் துறைக்கு அவரது பங்களிப்புகள் என்றும் நிலைத்திருக்கும் இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.