ராமேஸ்வரம் மீனவர்கள் 3-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

 
tt

மீன்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

tt

மீன்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

fisher

இந்நிலையில்  மீன்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தம் செய்கின்றனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.