"ஐயா ராமசாமி படையாட்சியாரின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்" - அண்ணாமலை, ஓபிஎஸ் ட்வீட்

 
tn

ஐயா ராமசாமி படையாட்சியார் அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறோம்  என்று அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், சுதந்திரப் போராட்ட வீரரும், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராகப் பல அரும்பணிகள் செய்தவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் போராடியவருமான ஐயா எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களது பிறந்த தினம் இன்று. 

tn

தேசத்தின் வளர்ச்சிக்கு உரமாக இருப்பது பல விடுதலைப் போராட்டத் தலைவர்களின் தியாகங்கள்தான். அப்படிப்பட்ட தியாக சீலர்களில் ஒருவரான ஐயா ராமசாமி படையாட்சியார் அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திரு. எஸ். எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். அவர் ஆற்றிய சமூகப் பணிகள் இந்தப் பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும்.என்று பதிவிட்டுள்ளார்.