"தைப்பூசத்தை முன்னிட்டு கோயில் நடை மூடல்" - இராமநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம்

 
tn

இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

tn

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம். அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் தைப்பூசம் தெப்ப உற்சவம் இத்திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு லெட்சுமனேஸ்வரர் திருக்கோயிலில் வருகின்ற நாள்.24.01.2024 தை 10ம் தேதி புதன் கிழமை பிள்ளையார் தெப்பம் இரவு 7.00 மணி அளிவில் நடைபெறும். அதனை தொடர்ந்து,25.01.2024 தை 11ம்தேதி வியாழக் கிழமை தைப்பூசம் தெப்ப உற்சவம், தீர்த்த உற்சவம் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 4.00 மணிக்கு நடைதிறந்து 5.00 மணிமுதல் 5.30 மணிவரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும் தொடர்ந்து பூஜா காலங்கள் சாயரட்சை பூஜை வரை நடைபெற்று காலை 10.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடானவுடன் திருக்கோயில் நடை சாத்தப்படும்.

tn

பகல் 1.25 மணிக்கு மேல் தீர்த்தவாரி நடைபெற்று மாலை 5.00 மணிக்கு மேல் தெப்ப மண்டபத்தில் தீபாராதனை நடைபெற்று மாலை 6.00 மணிக்கு மேல் இரவு 7.00 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் தெப்பம் எழுந்தருளல், இரவு 8.00 மணிக்கு தீபாராதனை நடைபெற்று திருக்கோயிலுக்கு திரும்புதல் வீதி உலா நடைபெறும். எனவே அன்று காலை 10.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை திருக்கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.