"ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பாஜக கூட்டணிக்கு உதவியாக இருக்கும்" பிரதமர் மோடி

 
tn

ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பாஜக கூட்டணிக்கு உதவியாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

modi

 சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி , பாமகவின் வரவால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கரம் வலுப்பெற்றுள்ளது; பாஜக கூட்டணிக்கு பாமக தொண்டர்களை வருக வருக என வரவேற்கிறேன். ராமதாஸின் அனுபவ அறிவும், அன்புமணியின் திறமையும் தமிழகத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும்.

pmk

‘இந்தியா' கூட்டணியின் நோக்கம் என்ன என்பது முதல் கூட்டத்திலேயே தெரிந்துவிட்டது; இந்து மதத்தை அழிப்பதே ‘இந்தியா' கூட்டணியின் நோக்கம்; சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என நினைக்கிறது; இந்து மதம் பற்றி பேசும் இந்தியா கூட்டணி மற்ற மதங்களைப் பற்றி பேசுவதே இல்லை . சக்தியின் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு ஏப்ரல் 19 இல் மக்கள் பாடம் புகட்டுவர் என்றார். முன்னதாக  கூட்டணியில் பாமகவுக்கு பத்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.