’மாம்பழ சின்னம்’... முந்திகொண்ட ராமதாஸ்
தனது தலைமையிலான பாமகவிற்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
![]()
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள கட்சிகளுக்கு சட்டப்பேரவை மற்றும் பல்வேறு தேர்தல்களில் அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதன்படி, தமிழக சட்டப்பேரவையில் காலம் முடியவடையும் நாளில் இருந்து 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் ஆணையத்தில் பொது சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம். அதன்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் இன்று முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தனது தலைமையிலான பாமகவிற்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை வேட்பாளர்களின் படிவங்களில் கையொப்பமிட தனக்கே அதிகாரம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாமகவின் தலைவராக கடந்த மே.5 ஆம் தேதி முதல் பொறுப்பு வகித்துவருகிறேன், எனது தலைமையிலான பாமகவிற்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சின்னம் வழங்கப்பட்டதற்கான தகவலை எங்கள் முகவரிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


