சென்னை ஐஐடியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து - ராமதாஸ் ஆவேசம்!

 
ராமதாஸ்

சென்னை ஐஐடியின் 58வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இளநிலை, முதுநிலை என மொத்தம் 1,962 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது , இவ்விழாவில் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றினார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் அவமதிப்பதாக அமைந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

போட்டியிட ஆளே இல்லை.. கட்சி எதுக்கு?… நிர்வாகிகள் கூட்டத்தில் ராமதாஸ் ஆவேசம்…  | Bhoomitoday

பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், "சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மாறாக சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் பாடப்பட்டிருக்கிறது. இது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது. 2018ஆம் ஆண்டு ஐஐடியில் தேசியத் தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. அப்போதும் அதைக் கடுமையாகக் கண்டித்தேன். அதைத் தொடர்ந்து ஐஐடி நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது.



2019ஆம் ஆண்டு ஐஐடி வைர விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வைர விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அந்த வழக்கத்தை ஐஐடி மாற்றக் கூடாது. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாகப் பாடப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.