“பாமக தலைவர் என அன்புமணி செயல்படுவது சட்டவிரோதம்! மாம்பழ சின்னத்தை அவருக்கு ஒதுக்கக்கூடாது”- ஐகோர்ட்டில் மனு
பாமக தலைவர் என அன்புமணி ராமதாஸ் செயல்படுவதை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும், மாம்பழ சின்னத்தை அன்புமணிக்கு ஒதுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாசும், பாமக கட்சியின் பெயர் சின்னம் கொடி ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் ஆதரவாளர் முரளிசங்கர் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் கட்சி யாருக்கு என்பதில் இழுபறி நீடித்து வருகிறது...கடந்த டிசம்பர் இறுதியில் சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாமகவின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். மேலும், அன்புமணியின் பதவிக் காலம் மே 29 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம்பாமக தலைவர் என்ற முறையில் அன்புமணிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இதற்கு எதிராக ராமதாஸ் டில்லி உயர்நீதிமன்றத்தை வழக்கு தொடர்ந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பாமக தலைவர் என அன்புமணி ராமதாஸ் செயல்படுவதை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும் மாம்பழ சின்னத்தை அன்புமணிக்கு ஒதுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாசும், பாமக கட்சியின் பெயர் சின்னம் கொடி ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் ஆதரவாளர் முரளிசங்கர் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .


