பசும்பொன் பெருமகனாரின் பங்கு ஈடு இணையற்றது - ராமதாஸ் புகழாரம்..

 
ramadoss


ஆங்கிலேயருக்கு எதிரான போரில் பொதுவாழ்க்கையிலும், அரசியலிலும் சாதனை படைத்த பசும்பொன் பெருமகனாரின் பங்கு ஈடு இணையற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.  

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் சாதனைகளை படைத்த பசும்பொன் பெருமகனார் அவர்களின் 115-ஆவது பிறந்தநாளும், 60-ஆவது குருபூசையும் கொண்டாடப்படும் இந்த நாளில் அவரை அனைவரும் போற்றி வணங்குவோம். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போரில் அவரது பங்கு ஈடு இணையற்றது!  

தேவர்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி வெற்றி பெற்றது,  தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு  உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என பொதுவாழ்க்கையில் அவர் படைத்த சாதனைகள் ஏராளம்!  

அனைத்துத் தரப்பு  மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் தான் இன்று  அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதற்கு காரணம்.  தேவர் பெருமகனார் ஆற்றிய பணிகளின் மூலம் அவர் எந்த நாளும் மக்களின் மனங்களில் வாழ்வார் என்பது உறுதி!” என்று குறிப்பிட்டுள்ளார்.