“நான் நியமனம் செய்யும் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் பதவியே செல்லும்”- ராமதாஸ்

 
ramadoss ramadoss

தைலாபுரம் இல்லத்தில் பாமக தென் மாவட்டங்களை சார்ந்த மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. புதியதாக தான் போட்டுள்ள நிர்வாகிகள் நியமனம் தான் செல்லும் என்றும் தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டுமென கூட்டத்தில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Making Anbumani a Cabinet Minister was my mistake: PMK founder Ramadoss -  The Hindu

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் புதியதாக நியமிக்கபட்ட மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு 50 மாவட்ட செயலாளர்களுக்கும், 50 மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் இருவர் மட்டுமே பங்கேற்கவில்லை.  கூட்டத்தில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் புதா. அருள்மொழி பொருளாளர், சையத்மன்சூர் உசேன் உள்ளிட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம், பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தலில் 40 தொகுதிகளை வெற்றி பெற பணியாற்ற வேண்டும் எனவும் புதியதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கட்சி பணியையும், தேர்தல் பணியையும் பாருங்கள்... நான் போடுகிற மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் பதவிகள் செல்லும், கவலைப்படாமல் பணியாற்ற வேண்டுமென கூட்டத்தில் தெரிவித்தததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.