என்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாக வாய்ப்பு இல்லை- ராமதாஸ்

 
ramadoss

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்திலுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் பாமகவின் 2024- 2025 ஆம் ஆண்டிற்கான 17-வது வேளாண் நிதி நிழல் அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், கெளரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர்  வெளியிட்டனர்.

Image

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “பாமகவின் வேளான் பட்ஜெட்டில் 2024- 25 ஆம் ஆண்டிற்கு 80 ஆயிரம் கோடி மதிப்பீடு கொண்டது. இதில் 60 ஆயிரம் கோடி வேளண்துறை மூலம் செலவிடவும், நீர்பாசனங்களுக்கு 20 ஆயிரம் கோடி செலவிட கோரி  வெளியிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டினை விட அதிகமாகும். வேளாண்மை வளராமல் வருமையை ஒழிக்க முடியாது. தமிழகத்தில் வேளாண் துறைக்கு தனி நிதி  நிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டுமென பாமக சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக அறிவுறுத்தப்பட்டு வந்ததில் திமுக ஸ்டாலின் தலைமையிலான அரசு  பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக வேளாண்மைக்கு என்று தனி  நிதி நிலை அறிக்கை  வெளியிடபட்டு வருகிறது. வறுமையை அழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் வேளான் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.

நீர் பாசன ஏரிகளை மீட்டெடுத்தல் மூலம் 40 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தி தருவதே முக்கியம் நோக்கம். தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில்  15 ஆயிரம் ஏக்கர் ஏரிகள் காணமல் போய் உள்ளது. 27,000 ஏரிகளின் கொள்ளளவு ஆக்கிரமிப்பால் குறைந்து விட்டது. காணாமல் போன ஏரிகளை மீட்டெடுக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்டெடுக்கவும் ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். வேளாண்மை தொழிற்சாலைகள் அமைக்க வேளாண்மை முதலீட்டாளர்கள் மாநாடு தஞ்சாவூரில் 6.04.2024 நடத்தப்படும். வேளாண்மை மூதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் கோடி நிதி திரட்டப்படும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் குவிண்டாலுக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

Image

கரும்பு டன் 2024- 25 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் 5000 ஆயிரமாக நிர்ணயிக்கப்படும். நியாய விலைக்கடையில் நாட்டு சர்க்கரை வழங்கப்படும். இதற்கு 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என்எல்சி 3 வது சுரங்க திட்டம் முதல் இரு சுரகங்களை விரிவாக்கும் திட்டத்திற்கு தடை விதிக்கப்படும். இதற்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்க அனுமதிக்கப்படாது. இதனை தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். என்னுடைய வாழ்க்கை வரலாறு  திரைப்படம் வெளியாக வாய்ப்பு இல்லை” என்றார்.