மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ் தொடர் ஆலோசனை
May 31, 2025, 11:29 IST1748671169257
விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்றும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/annby.jpg)
பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்றும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். ஏற்கனவே தீரன் உள்ளிட்டவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை செய்த நிலையில், இன்றும் பலரை சந்தித்து வருகிறார். இதேபோல் ராமதாஸின் தைலாபுரம்தோட்ட இல்லத்திற்கு ஆடிட்டர் வருகை புரிந்துள்ளார். ராமதாஸால் நியமிக்கப்பட்ட, திருவள்ளூர்(ம)மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ஆகியோரும் வந்துள்ளனர்.


