டிஜிபியிடம் ராமதாஸ் பரபரப்பு புகார்!

 
ramadoss ramadoss

அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதள கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.

ramadoss

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்னதாக தான் தான் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் என்றும், என் மூச்சு உள்ளவரை நானே பதவி வகிப்பேன் என்றும் ராமதாஸ் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதன் தொடர்ச்சியாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் ராமதாஸ்.

இப்படியாக உட்கட்சி விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதள கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். புகாரில், சமூக வலைதள கணக்குகளின் பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ், முகநூல் கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள் கைப்பற்றி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.