மாநிலங்களவை எம்.பி. ஆக அன்புமணி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
Apr 22, 2026, 21:09 IST1776872370703
மாநிலங்களவை எம்.பி. ஆக அன்புமணி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாநிலங்களவை எம்.பி. ஆக அன்புமணி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்த்து ராமதாஸின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினராக இல்லாத அன்புமணி, போலியான ஆவணங்கள் அளித்து முறைகேடாக எம்பி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் வழக்கு தொடர்ந்துள்ளார். அன்புமணி ராமதாஸ் பாமகவின் உறுப்பினராக இல்லாத நிலையில், அவர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். போலியான ஆவணங்களை அளித்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

