தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!!

 
tn

தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

tn

இஸ்லாமியர்களின் முக்கிய விழாவான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது . அரபு நாடுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.  அன்றைய தினம் ஷவ்வால் பிறை  தென்படாததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாகுவுதீன் அயுப் அறிவித்திருந்தார்.

tn

 இதை முன்னிட்டு தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது . இன்று அதிகாலை முதலே மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது.  அத்துடன் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பிரியாணி செய்யும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.  ஆசிய கண்டத்தில் இந்தியா உள்பட பாகிஸ்தான் வங்கதேசம் போன்ற நாடுகளிலும் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியிலுள்ள ஜூம்மா மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்று நிலையில் அங்கு பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.