அரசு தலைமை கொறடாவாக க.ராமச்சந்திரன் நியமனம்

 
அரசு தலைமை கொறடாவாக க.ராமச்சந்திரன் நியமனம்

அரசு தலைமை கொறடாவாக க.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளார்.

இலாகா மாறியது ஏன்? நான் தான் முதல்வரிடம் மாற்றித் தர சொன்னேன்.. அமைச்சர்  ராமச்சந்திரன் சொன்ன விஷயம்! | Why Minister Ramachandran department changed  from forestry to ...


2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைத்தது முதல் தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி.செழியன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தமிழக அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக கோவி.செழியன் அமைச்சரவையில் இணைக்கப்பட்டார். கோவி. செழியனுக்கு உயர்க்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், கோவி.செழியன் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். 


கோவி.செழியன் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டதையடுத்து, தலைமை கொறடாவாக கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வந்த ராமச்சந்திரன், தற்போது அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.