"அரசியல் ஆதாயத்திற்காகவே ராமர் கோவில் விழா நடத்தப்படுகிறது" - கே. பாலகிருஷ்ணன் விமர்சனம்!!

 
K balakrishnan

மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர், அரசியல் சாசனப்படி உறுதி மொழி எடுத்துக் கொண்டவர், மதச் சார்புள்ள நிகழ்வை நடத்துகிறார் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

K Balakrishnan - கே.பாலகிருஷ்ணன்

 மாமேதை லெனின் நினைவு தின நூற்றாண்டு நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் செங்கொடியை ஏற்றி வைத்து, மாமே தை லெனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கே. பால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , பிரதமர் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அவற்றையெல்லாம் செய்கிறார். கோவிலுக்கு சென்று பிரதமர் வழிபடுவது தனிப்பட்ட விஷயம்; அது அவரது இறை நம்பிக் கை. ஆனால், மசூதியை இடித்த இடத் தில் ராமர் கோவிலைக் கட்டி, அதில் சிலையை பிரதமரே பிரதிஷ்டை செய்வ தன் மூலம் சிறுபான்மை மக்கள் மீது  அரசியல் வெறுப்புணர்வை ஊக்குவிக் கிறார். அது மட்டுமல்ல, கோவிலை முழுமையாக கட்டாமல், அதில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதை சங்க ராச்சாரியார்கள் மற்றும் இறை நம்பி க்கை உள்ளவர்கள் ஏற்கவில்லை.

balakrishnan cpm
மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர், அர சியல் சாசனப்படி அனைத்து மதத்தை யும் சமமாக நடத்துவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டவர், மதச் சார்புள்ள நிகழ்வை நடத்துகிறார். இது அரசியல் சாசனத்திற்குவிரோதமானது. தமிழக அரசு விழாவில் பங்கேற்க வில்லை என்று தமிழகத்தில் உள்ள  பாஜக தலைவர்கள் விமர்சிக்கின்ற னர். கோவில் விழாவை அரசியல் விழாவாக மாற்றுவதை ஏற்க முடி யாது. அரசியல் ஆதாயத்திற்காகவே ராமர் கோவில் விழா நடத்தப்படுகிறது. இதில் பக்தியோ, இறை நம்பிக்கை யோ, மத உணர்வோ இல்லை.

மருத்துவமனை, அரசு அலு வலகங்கள், பொதுத்துறை நிறுவனங் களுக்கு எதற்காக விடுமுறை தர வேண்டும்? மதச்சார்பற்ற அரசு என்ற கோட்பாட்டையே சிதைக்கிறார்கள். இதேபோன்று இன்னொரு மதத்தின் விழாவிற்கு விடுமுறை தருவார்களா? மத உணர்வை வைத்து, அரசியல் செய் வதற்கான நிகழ்ச்சியே தவிர வேற ல்ல. இது நல்ல உணர்வு அல்ல. பத விக்கான வெறித்தனமான முயற்சி. இந்த விழாவிற்கான அழைப்பு வந்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச் சூரி, ராமர் கோவில் நிகழ்வு அரசியல் விழாவாக நடத்தப்படுகிறது. அர சியலில் மதம் கலக்கப்படுவதை ஏற்க  முடியாது. எனவே பங்கேற்கமாட்டோம் என்று அறிவித்தார். அதனை தொட ர்ந்து பல அரசியல் கட்சிகள் இந்த நிக ழ்வை புறக்கணித்துள்ளதை வரவேற்கிறோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.