கோவையில் ராம் சரணுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை..!!
ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பெத்தி'.விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதற்கிடையில், இந்த படத்திற்கான படத்துக்காக சண்டை காட்சியில் நடித்தபோது எதிர்பாராதவிதமாக கையில் காயம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இந்த சிகிச்சையை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள ராம்சரண் விமானம் மூலம் கோவை வந்தார். அவருடன் அவரது தந்தையான பிரபல நடிகர் சிரஞ்சீவியும் வந்திருந்தார்.
கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நடிகர் ராம்சரணுக்கு மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ராம்சரண் ஒருசில வாரங்கள் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் காயம் அடைந்த இடது கை மணிக்கட்டு இயல்புநிலைக்கு திரும்ப குறைந்தது 4-6 வாரங்கள் வரை ஆகும் என்பதால் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படலாம். இதனால் அவர் கோவை மருத்துவமனையில் இன்னும் சில நாட்கள் தங்கியிருந்து டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி சில நாட்கள் ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை தனியார் மருத்துவமனையில் நடிகர் ராம்சரண் அனுமதிக்கப்பட்டு உள்ள செய்தி வெளியானதில் இருந்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

