ஜூன் 18-ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்! இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்!
சட்டசபை தேர்தலின் போது மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் சி.வி. சண்முகம். தமது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிட்டார்.
இதையடுத்து அந்த ஒரு ராஜ்யசபா இடம் காலியானதாகவும், ஜூன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், இன்று (ஜூன் 1) முதல் ஜூன் 8 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஜூன் 9ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.
ஜூன் 11ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாளாகும். தமிழகம் மட்டும் அல்லாது மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்பட 10 மாநிலங்களில் மொத்தம் 24 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு ஜூன் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் அன்றைய தினமே ஓட்டு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்.

