“நீங்க செய்தீர்களா? எல்லாம் மக்கள் வரிப்பணத்தில் செய்தது”- எ.வ.வேலுக்கு ராஜ்மோகன் பதிலடி

 
ழ

சட்டசபையில் இருக்கும் டேபிள், மைக், இருக்கைகள் எல்லாம் திமுக ஆட்சி காலத்தில், தான் பார்த்து பார்த்து செய்ததாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசியதற்கு, எல்லாம் மக்கள் வரிப்பணத்தில் செய்தது என அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.

பேரவையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறாா். அந்த மைக், சோ், டேபிள் செய்தது நாங்கள்தான் என்கிறாா்கள் திமுகவினர், இவை அனைத்தும் செய்தது மக்கள் வாிப்பணத்தில்தான். கடந்த திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளினிக் ஆக மாறியது. நான் பத்து இடத்திற்கு போயாவது செல்வம் சேர்த்து வருவேன். நீ படிக்கின்ற வெலையை மட்டும் பார் என்று தமிழ்நாட்டின் கல்விக் கண்ணை திறந்தவர் கொள்கைத் தலைவர் காமராஜர். காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை தவிர வேறு எந்த பெயரும் பொருத்தமாக இருக்காது. பெயா் மாற்றம் என்பது கலைஞா் ஆட்சியிலும் இருந்தது. ஜெ.ஜெ. ஃபிலிம் சிட்டியை `எம்.ஜி.ஆர். திரைப்பட நகரம்' என்றும்,  அம்மா மருந்தகத்தை `முதல்வர் மருந்தகம்' என்றும்,  அம்மா பசுமை வீட்டை  `கலைஞர் கனவு இல்லம்' என்றும் நீங்கள் பெயர் மாற்றினீர்கள். பெயர் மாற்றம் ஒன்றும் புதிதல்ல. அதேபோல, `காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயரை மாற்றி அத்திட்டத்தை எங்களின் முதல்வர் மேலும் விரிவாக்கம் செய்திருக்கிறார்.

காலை உணவுத்திட்டம் 203 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்பில் இருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.