பள்ளிகளுக்கு விடுமுறையா?- அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன தகவல்
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வெளியேறிவிட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளை அமைச்சர் ராஜ்மோகன் துரிதப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “முக்கிய இடங்களில் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வடிந்துவிட்டது. வானிலை மைய தகவலை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மழை பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் உடனுக்குடன் கூறிவருகிறோம். வானிலை மையம் தரும் தகவல்களைப் பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை பற்றி முடிவு எடுக்கப்படும். எதிர்பார்க்காத அளவு மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் நீரை வெளியேற்றிவிட்டோம்.மழை பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் விஜய்யிடம் மணிக்கு ஒருமுறை தெரிவித்து வருகிறோம். சென்னையில் குறுகிய நேரத்தில் எதிர்பார்க்காத கனமழை. 20-க்கும் மேற்பட்ட சுரங்கபாதையில் மழைநீர் வெளியேற்றம். பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம். பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை. ராட்சத மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றம். வானிலை ஆய்வு மைய தகவலை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைப்பு. வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளோம்.
இது யாரையும் குறை சொல்லும் நேரம் அல்ல. அதிகாரிகள் இரவு முழுவதும் சிறப்பாகப் பணியாற்றியதால், மழைநீர் விரைவாக வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அவற்றையும் விரைந்து முடிப்போம். மழை தீவிரமாக பெய்யும் நேரத்திலும் இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டதாக முந்தைய ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த மழைக்காலம் முடிந்த பிறகுதான் அதன் நிலை தெரியவரும். கடந்த ஆட்சியில் ஏன் மழைநீர் தேங்கி நின்றது என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது” என்றார்.

