தமிழக முதல்வர் விஜய் குறித்த கேள்விக்கு ரஜினி ரியாக்சன்..!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக, தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்து, பின்னர் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.இது ஒருபுறம் இருக்க, விஜய் முதலமைச்சராக பதவியேற்றது முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய பேச்சுகள் சமூக வலைதளங்களிலும், மக்கள் மத்தியிலும் அதிக அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு இன்று புறப்பட்டார். அங்கிருந்து அவர் ரிஷிகேஷ் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, விமான நிலையத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்திடம், விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ளது பற்றி நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.
ஆனால், அந்த கேள்விக்கு ரஜினிகாந்த் எந்த பதிலும் சொல்லாமல், கையெடுத்து கும்பிட்ட படி சிரித்துக் கொண்ட அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
விஜய் குறித்த கேள்விக்கு ரஜினி ரியாக்சன்#ssnews #dailynews #NewsUpdate #Rajini #TVKVijay #tvk pic.twitter.com/JIvx4AXeVo
— SS News Digital (@SSNEWSDigital) May 12, 2026

