ரஜினி அரசியலுக்கு வராதது மிகப்பெரிய மிஸ்; லீ குவான் யூ போல செய்ய நினைத்தார் - லதா ரஜினிகாந்த் உருக்கம்..!

 
1

தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய், புதிதாக கட்சி ஆரம்பித்து, வெற்றிப்பெற்று, முதல்வராகவும் ஆனார்.


அண்மையில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த், 'மக்கள் மேடை' என்ற பெயரில் புதிய மக்கள் இயக்கத்தை அறிமுகப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பு சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது தனது நோக்கம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக வெளியிட்டிருந்த காணொளியில், "எங்களுடைய இயக்கத்தின் மூலம் இந்த மாநிலத்திற்காக பணியாற்ற விரும்பும் அனைவரும் எங்களுடன் இணையலாம். பெரிய மக்கள் சக்தியாக உருவாகி மாநிலத்துக்கு பல நன்மைகளைச் செய்ய வேண்டும். ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். உள்ளூர் அளவில் புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும். மக்களிடம் இருக்கும் சிந்தனைகள், வலிமை மற்றும் பங்களிப்புகளை மாநில வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும்" என்று லதா ரஜினிகாந்த் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அறிவிப்பு அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியதுடன், லதா ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்க உள்ளாரா என்ற கேள்வியையும் எழுப்பியது.

இந்த நிலையில், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் யுடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ரஜினிகாந்த் பெரிய தலைவர். 2021ல் அவர் அரசியலுக்கு வராதது மிகப்பெரிய மிஸ். ஒரு பெரிய தலைவரை மிஸ் பண்ணிட்டோம்.நான் ஃபீல் செய்தேன். அவர் வரவில்லை என்பதற்காக அல்ல.. அவர் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில், அவருக்கு பல திட்டங்கள் இருந்தன.. நிறைய கனவுகள் இருந்தது.ஆனால் கெடுவாய்ப்பாக கோவிட் காலத்தில் அப்படி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. எப்படி ஒரு நாடு இருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டிருந்தார். லீ குவான் யூ செய்தது மாதிரி செய்ய வேண்டும் என நினைத்திருந்தார். அவரது விஷனை நான் அறிவேன். தமிழகத்தில் ஒரு பெரிய தலைவரை நாம் மிஸ் செய்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.