மு.க.ஸ்டாலினின் வரலாற்று புகைப்பட கண்காட்சி - நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்

 
rajini

’எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். 

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்கிற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.  முதல்வர் மு. க. ஸ்டாலின்  பிறந்தநாள் நாளையொட்டி இந்த கண்காட்சி  நடைபெறுகிறது. இந்த புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்து அவர் கண்காட்சியை பார்வையிட்டார். இந்த புகைப்பட கண்காட்சியில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியுடன்  முதல்வர் ஸ்டாலின் உள்ள புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் முதல்வர் ஸ்டாலினின் இளமை பருவத்தில் இருந்து தற்போது வரை உள்ள காலகட்டங்களை பதிவு செய்திருக்கிறது இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள்.  குறிப்பாக மிசா காலத்தில் அவர் சிறையில்  அனுபவித்த சித்திரவதைகள் குறித்தும் இந்த கண்காட்சியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

rajini

இந்நிலையில், இந்த புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். நடிகர் ரஜினிகாந்துடன் அமைச்சர் சேகர்பாபு உடனிருந்து கண்காட்சி குறித்து விளக்கி கூறினார். கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்று தான். படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கூறினார்.