முதலமைச்சரிடம் நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்

 
rajinikanth mk stalin rajinikanth mk stalin

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.

T.N. CM Stalin wishes Rajinikanth a speedy recovery - The Hindu

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜாவை கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,  பரிசோதனைக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால்,  காலை நடைபயிற்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும், தேவையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும், முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். தொலைபேசி மூலம் பேசிய ரஜினிகாந்த், முதலமைச்சர் விரைவில் நலமுடன் வீடு திரும்ப விரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.