செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த ரஜினிகாந்த்..!
Nov 28, 2025, 05:10 IST1764286834000
நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது
'ஜெயிலர் இரண்டாம் பாகம்' படத்தின் படப்பிடிப்பு நன்றாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும், கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் தனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவிருப்பதாகவும், அதற்காகவே தான் அங்கு செல்வதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்தால், நான் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராக உள்ளேன்," என்று குறிப்பிட்டார்.
பிறந்தநாள் கொண்டாடும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” என்றார்.
அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்ததை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘நோ கமென்ட்ஸ்’ என்று கூறிவிட்டு ரஜினிகாந்த் சென்றார்.

