”வலுவான எதிர்க்கட்சி - ஜனநாயகத்திற்கு ஆரோக்கியம்”- ரஜினிகாந்த்

 
ரஜினிகாந்த்

நாடாளுமன்றத்தில் மக்கள் வலுவான எதிர்கட்சியை தேர்வு செய்தது ஜனநாயகத்திற்கு நல்ல ஆரோக்கியமான அறிகுறி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அயோத்தி கோயில் விழாவில் பங்கேற்க புறப்பட்டார் ரஜினிகாந்த்

டெல்லியில் பிரதமர் மோடியின்  3வது முறையாக பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இது ஒரு  சாதனை, அவருக்கு பாராட்டுக்கள். மக்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஒரு ஆரோக்கியமான அறிகுறி.

அடுத்த 5 ஆண்டுகள் நல்லதான ஆட்சியாக  இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ள திருமாவளவன் மற்றும் சீமானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்..