“3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்” - ரஜினிகாந்த்

 
ரஜினிகாந்த்

பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகிய மூவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்றுள்ளார். முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி கண்டிருக்கும் திமுக கூட்டணி தலைவர், என் அருமை நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள். ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நண்பர் சந்திரபாபுவிற்கும், மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கும் பிரதமர் மோடிக்கும் பாராட்டு, வாழ்த்துக்கள்” என்றார்.