‘500 ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு’ அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்

 
‘500 ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு’ அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், அவர் மருமகன் தனுஷ் ஆகியோர், அயோத்தி இராமர்கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்னையில் இருந்து  உத்தரப்பிரதேசத்துக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த அயோத்தி ஶ்ரீராமர் கோவில்  திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நாளை கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், நாடு முழுதும் உள்ள பக்தர்கள் இவ்விழாவிற்கு ஆயத்தமாகி வருகின்றனர். 

இந்நிலையில் சென்னையில் இருந்து அயோத்தி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “500 ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. 500 ஆண்டு கால பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் நிரந்திர தீர்வு. நாளை அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் வரலாற்றில் மறக்க முடியாத நாள். வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நாள் இது.