"சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை" - ரஜினிகாந்த் பேட்டி!!

 
tn

லால் சலாம் படத்தை விளம்பரப்படுத்த சங்கி விவகாரம் பற்றி ஐஸ்வர்யா பேசவில்லை என்று  ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

rajini

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, அனைத்து மதங்களுக்கும் சொந்தமானவன் நான். சங்கி என்பது கெட்டவார்த்தை என்று எனது மகள் ஐஸ்வர்யா சொல்லவில்லை. அப்பா ஆன்மிகவாதி, அனைத்து மதத்தையும் விரும்பும் அவரை ஏன் சங்கி என்று செல்கிறார்கள் என்பதே ஐஸ்வர்யா கேள்வி. லால் சலாம் படம் நன்றாக வந்திருக்கிறது. மதநல்லிணக்கம் குறித்து பேசுகிறது. இப்போது நான் வேட்டையன் படத்தின் படப்பிடிப்புக்காக சென்று கொண்டிருக்கிறேன். அந்தப் படமும் நன்றாக வந்துள்ளது என்றார். 

tn

முன்னதாக லால் சலாம்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 'அப்பாவை சங்கின்னு சொல்லும்போது கோபம் வரும்; இப்ப சொல்றேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது; அப்படி இருந்திருந்தா அவர் 'லால் சலாம்' படத்துல நடிச்சு இருக்க மாட்டார்; ஏனெனில், இதில் மனித நேயமிக்க உள்ளம் கொண்டவரால் மட்டும் தான் நடிக்க முடியும்' என்றார்.