35 வருட கனவு- ரஜினிகாந்துக்கு கோயில் கட்டிய ரசிகர்
35 வருட கனவுகளை நினைவாக்கும் விதமாக ரஜினி பவனம் என ரஜினி பெயரில் வீடு கட்டி ரஜினிக்கு தனி கோயில் எழுப்பிய மதுரை ரஜினி ரசிகரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் கட்டுமான தொழில் புரிந்து வருகிறார். தீவிர ரஜினி ரசிகரான இவர் திருப்பரங்குன்றம் நகர ரஜினி மன்ற செயலாளர் ஆகவும் உள்ளார். தற்போது கிரிவலப் பாதையில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவனம் என்ற பெயர் வைத்துள்ளார். மேலும் வீட்டின் நுழைவு பகுதியில் ரஜினி மார்பளவு சிலை ஒன்றை வைத்து கோவில் கட்டி வருகிறார். இதன் திறப்பு விழா நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ரஜினியின் சகோதரர் அழைத்து வீட்டு திறப்பு விழா நிகழ்த்த உள்ளார்.

இதுகுறித்து சரவணன் கூறுகையில், “நான் ரஜினியின் தீவிர ரசிகன் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக ரஜினி தீவிர ரசிகராக இருந்து வருகிறேன். முன்பு வாடகை வீட்டில் குடியிருந்தபோது ரஜினி குறித்த போஸ்டர்கள் படங்களை விட்டு நில் ஒட்டி வைத்தேன். அப்போது வீட்டு உரிமையாளர் வீட்டின் ஒட்டப்பட்டிருந்த ரஜினி படங்களை கிழிக்கச் செய்தார். இதனால் மனவருத்தம் அடைந்தேன். அப்போது எனது தந்தை ஒன்றும் கவலைப்படாதே! நீ சொந்தமாக வீடு கட்டி உனது தலைவர் பெயரிலேயே ரஜினி பவுனம் என அந்த வீட்டிற்கு பெயர் வை எனக் கூறினார். கடந்த 35 வருடங்களாக என்னுள் இருந்த முயற்சியை கொண்டு தற்போது இந்த வீட்டை கட்டி உள்ளேன். இதற்கு ஸ்ரீ ரஜினி பவுனம் என பெயர் வைத்து எங்களுக்கு கடவுளாக தெரியும். ரஜினிகாந்தின் மார்பளவு சிலையையும் வைத்துள்ளேன். ரசிகர் மன்றத்தில் மக்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் செய்துள்ளோம். குறிப்பாக சரவண பொய்கையை தூர் வாருவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் செய்துள்ளோம். மேலும் சூப்பர் ஸ்டாரின் படங்கள் வெளிவரும் நாளில் அந்த படங்கள் வெற்றியடைய மண் சோறு சாப்பிடுவது, பறவை காவடி எடுப்பது போன்றவை செய்துள்ளோம். 35 வருடங்களின் என்னுடைய கனவு சொந்த வீட்டின் மூலம் நிறைவேறி உள்ளது” என்றார்.


