வேட்டையனை சந்தித்த சேனாபதி - வைரல் போட்டோ

 
gggg

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்  22 வருடங்கள் கழித்து இந்தியன் 2 ஆம் பாகம் உருவாகியுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் வருகிற  ஜூலை 12ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இதில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், நெடுமுடி வேணு, மனோபாலா, விவேக், மாரிமுத்து என பலரும் நடித்துள்ளனர். 

இந்தியன் 2

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்து வரும் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிகர் கமல் ஹாசனை சந்தித்துள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்த கமல் ஹாசனை ரஜினி சந்தித்து பேசினார். 

y

முன்னதாக இயக்குநர் ஞானவேல் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தை முடித்துள்ளார். இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.