இக்கட்டான நேரத்தில் ஸ்டாலினை சந்தித்து ரஜினி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடிக்கவுள்ளது. தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 82,997 வாக்குகள் பெற்ற நிலையில், மு.க.ஸ்டாலின் 74,202 வாக்குகள் பெற்று 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இத்தகைய இக்கட்டான சூழலில் சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்திற்கு சென்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், இக்கட்டான நேரத்திலும் உங்களுடன் இருப்பேன் எனக் கூறினார். உங்கள் மக்கள் பணி எப்போதும் போல் தொடரட்டும் என்றும் நடிகர் ரஜினி வாழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

