லூலூ குழுமத் தலைவருடன் ரஜினிகாந்த் சந்திப்பு!

 
rajinikanth

ஜெயிலர் படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து, சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி அமைத்துள்ள இயக்குநர் த.செ ஞானவேல், வேட்டையன் என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின்  படப்பிடிப்பு கேரளா, திருச்சி, சென்னை, திருநெல்வேலி, மும்பை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், ஃபகத் பாசில், ரித்திகா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

rajinikanth Lului


வேட்டையான் படப்பிடிப்பை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளார். இந்நிலையில் அபுதாபியில் முக்கிய தொழிலதிபர்களை சந்தித்த ரஜினிகாந்த், பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான லூலூ குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலியை சந்தித்து உரையாற்றினார். பின்னர் அவருடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணித்தார். அதன்பிறகு லூலூ குழுமத்தின் சிஓஓ சைஃபி ரூபாவாலாவையும் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சைஃபி, “இந்தியாவின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவருடன் இணையும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r