படையப்பா தயாரிப்பாளர் தேனப்பனுக்கு 5 சவரன் தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி..!

 
1

நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தன் 173வது திரைப்படமாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், 'படையப்பா' பட தயாரிப்பாளர் தேனப்பனுக்கு 5 சவரன் தங்க சங்கிலி பரிசளித்தார் ரஜினிகாந்த்..கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர்ஸ்டார் ரஜினி, நடிகைகள் சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த படம் தான் படையப்பா. 1999- ஆம் ஆண்டு வெளியான இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. 


படையப்பா வெளியாகி 25 ஆம் ஆண்டு நிறைவானதை கொண்டாடும் விதமாகவும் ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி படையப்பா படம் ரீ-ரிலிஸ் ஆனது. ரீ ரிலிசிலும் இந்த படம் சக்கை போடு போட்டது. 25 ஆண்டுகளை கடந்தும் திரையரங்குகளில் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதனால், மகிழ்ச்சி அடைந்த ரஜினிகாந்த், அப்போதே படையப்பா படத்தின் டைரக்டர், நடிகை ரம்யா கிருஷ்ணன், தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்டோரை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இந்த நிலையில், படையப்பா பட தயாரிப்பாளர் தேனப்பனை மீண்டும் நேரில் அழைத்த ரஜினிகாந்த், அவருக்கு 5 சவரன் தங்க சங்கிலியை பரிசளித்தார்.