திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினி.. ரசிகனாக , நண்பனாக வாழ்த்துகள் - மு.க.ஸ்டாலின்..!!

 
rajinikanth mk stalin


 "திரையுலக வாழ்வில்‌ ஐம்பது ஆண்டுகளைத்‌ தொட்டிருக்கும்‌ தங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்‌" என நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “திரையுலகில் உச்ச நட்சத்திரமாக அரை நூற்றாண்டு நீடிப்பது என்பது மிகப்பெரிய சாதனை. திரையுலகில் நுழையும்போது இருந்த  அதே துடிப்பும், வேகமும் இன்றும் தங்களிடம் இருப்பதை அண்மையில் ‘கூலி’ திரைப்படத்தில் கண்டு, ’இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா’ என்று உங்களுக்காக எழுதப்பட்ட வரிகள் எத்தனை பொருத்தமானது என்று வியந்தேன்.  

rajini

திரையில் உங்களைக் கண்டதும் ஆர்ப்பரிக்கும் ரசிகர்களின் அன்புக்காக நீங்கள் அளிக்கும் அர்ப்பணிப்பும் உழைப்பும் அளப்பரிய்து. சமரசமின்றி உழைக்கும் உங்களின் உன்னத இயல்புதான் தங்களை இந்த உயரத்தில் நிரந்தரமாக நிலை நிறுத்தி இருக்கிறது.  இன்னும் பல்லாண்டு தொடர ரசிகனாக நண்பனாக நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.