சிறையில் உள்ள சந்திரபாபுவை சந்திக்க ரஜினிகாந்த் மனு

 
சிறையில் உள்ள சந்திரபாபுவை சந்திக்க ரஜினிகாந்த் மனு 

ராஜமுந்திரி சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை நாளை சந்திக்க அனுமதி கோரி நடிகர் ரஜினிகாந்த் மனு அளித்துள்ளார். 

Image

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது ரூபாய் 317 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி அவரை ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். வருக்கு செப்.22 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நீதிமன்ற காவலில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இடைக்கால வழக்கமான பிணை என இரண்டு மனுக்களை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார். இதனிடையே ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசியில் உரையாடி அவருக்கு ஆறுதல் கூறியதாகவும், தவறு செய்யாத உங்கள் தந்தை விரைவில் மீள்வார் என ஆறுதல் தெரிவித்ததாகவும் தெரிகிறது.

ரஜினிகாந்த்

இந்நிலையில் எனக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் 30 ஆண்டுக்கால நட்பு என அடிக்கடி கூறும் நடிகர் ரஜினிகாந்த், ராஜமுந்திரி சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை நாளை சந்திக்க அனுமதி கோரி நடிகர் ரஜினிகாந்த் மனு அளித்துள்ளார்.