விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் - ரஜினி வாழ்த்து

 
gg

மறைந்த நடிகரும் , தேமுதிக தலைவருமான  விஜயகாந்துக்கு மத்திய அரசின் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட  நிலையில்  கடந்த 9-ம் தேதி அவரது மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.  இதை தொடர்ந்து சென்னை திரும்பிய அவர் பத்ம பூஷண் விருது மற்றும் பதக்கத்தை விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

vijayakanth

இந்நிலையில்  விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கௌரவித்ததில் மிகுந்த  மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் அவருடைய வரலாற்றை பதிவிட்டிருக்கிறார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது.


விஜயகாந்த் மறைவை  இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. திடீரென்று தோன்றி பல சாதனைகள் செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த் என்று புகழாரம் சூட்டியுள்ளார் .